ஓடும் பேருந்தில் திடீர் தீவிபத்து.. 2 பயணிகள் தீயில் கருகி பலி.. 12 பேர் படுகாயம்!!

 
பேருந்தில் தீவிபத்து

அரியானா மாநிலத்தில் தில்லி-குருகிராம் விரைவுச் சாலையில் நேற்று நவம்பர் 8ம் தேதி புதன்கிழமை இரவு ஓடும் ஸ்லீப்பர் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 10க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்தனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.  டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு செல்லும்  சாலையில் ஜார்சா மேம்பாலம் அருகே இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.  

பேருந்தில் தீவிபத்து

தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறை படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன  சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இரவு வானத்தில் புகை மூட்டத்துடன்  பேருந்து  தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.  

பேருந்தில் தீவிபத்து

இது குறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் "ஏஆர் 01 கே 7707 பதிவு எண் கொண்ட ஒரு ஸ்லீப்பர் பேருந்து வண்டிப்பாதையில் தீப்பிடித்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததும்  3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன," என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. குருகிராமில் உள்ள சிவில் மருத்துவமனை மருத்துவர்  மானவ் படுகாயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக  கூறியுள்ளார்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web