கார்கள் மோதியதில் 2 பேர் படுகாயம்... !
கோவை மாவட்டம் சூலூர் அருகே தொடர்ந்து 3 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இந்தவிபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். கோவை மாவட்டம் சூலூர் ஆறுபடை முருகன் கோயில் அருகே உடுமலைப்பேட்டையில் வசித்து வருபவர் சுப்பிரமணி . இவர் தனது காரை ஒரு பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு வளைவில் திருப்ப முயற்சித்தார்.

அப்போது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்த பார்ச்சுனர் வாகனம் கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த கார் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீதும் மோதியது.

அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காரில் இருந்தவர்களை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு காரில் வந்த காரைக்குடி ஓட்டுனர் 26 வயது முகமது ஆசிப், லட்சுமணன், அவரது மனைவி தெய்வானை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் பழநியில் இருந்து வந்த காரில் இருந்த ராகுல், ரமேஷ், கவிதா, ரேணுகா, தண்டபாணி, நந்தினி, கலாவதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
