+2 ரிசல்ட்!! சதமடித்த மாணவ, மாணவிகள் பட்டியல் வெளியீடு!!

 
மாணவிகள்

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முடிவுகளை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இம்முடிவுகள் மாணவர்களின் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முக்கியப் பாடங்களில் 100 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் 
தமிழ் - 2 பேர் 
ஆங்கிலம் - 15 பேர்
இயற்பியல் - 812 பேர்
வேதியியல் - 3,909 பேர்
உயிரியல் - 1,494 பேர்
கணிதம்-  690 பேர்
தாவரவியல்  -340 பேர்

மாணவிகள்
விலங்கியல் - 154 பேர்
கணினி அறிவியல் - 4,618 பேர்
வணிகவியல்- 5,678 பேர்
கணக்குப் பதிவியல் - 6,573 பேர்
பொருளியல் - 1,760 பேர்
கணினிப் பயன்பாடுகள்-  4,051 பேர் 
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 1,334 பேர்
மொத்தமாக 32,501  மாணவ, மாணவியர்கள்  100 % மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 8.65லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். 8.17 லட்சம் பேர் தேர்வு எழுதினர். 48000க்கும் மேற்பட்டோர் பல்வேறு  காரணங்களால் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு முடிந்ததும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 10- முதல் 29ம் தேதி வரை 79 மையங்களில் நடைபெற்றன.

கல்லூரி மாணவிகள்

மே 5ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவு மே 8ம் தேதி  வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.  தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் காலை 10 மணிக்கு மேல் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பொறுத்தவரை மொத்தமாக    94.03 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில்  மாணவர்கள் 91.45 %, மாணவிகள் 96.38 % தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் அதிகமாக உள்ளது.  வழக்கம் போல்  மாணவர்களை விட மாணவிகள் 4.93% தேர்ச்சி.  விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web