மினி பேருந்து கவிழ்ந்ததில் 2 பள்ளி மாணவர்கள் பலி!!

 
மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில்   அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து கல்வி பயின்று செல்கின்றனர்.    வத்திராயிருப்பில் இருந்து வ.புதுப்பட்டிக்கு தனியார் மினி பேருந்து புறப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் பயணம் செய்தனர். கிறிஸ்டியான்பேட்டை போதர் குளம் கண்மாய் அருகே வளைவான பகுதியில் வேகமாக சென்று திரும்பிய போது சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதிய மினி பேருந்து கவிழ்ந்தது.

மினி பேருந்து


இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்   தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த அரசு மேல்நிலை பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கும் வ.புதுப்பட்டி அருகே நடுப்பட்டி பகுதியில் வசித்து வரும்   நந்தகுமார்  , பாண்டி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மினி பேருந்து
 படுகாயம் அடைந்த 20 பேர் வ.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web