மின்சாரம் தாக்கி 2 மாணவர்கள் பலி! கல்லூரி கட்டுமானப் பணியின் போது விபரீதம்!

 
ஹரீஷ்குமார்

விதி எப்படி நம்மை சுழற்றியடிக்கிறது என்பதும், நாவலின் கடைசி பக்கத்தைத் தான் படித்து கொண்டிருக்கிறோம் என்பதையும் பலரும் அறிவதில்லை. மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் கவலைப்படுவதேயில்லை. அது ப்ரீ கேஜி படிக்கும் குழந்தையானாலும் சரி... கல்லூரியில் முதுகலைப் படிக்கும் மாணவியானாலும் சரி பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், தங்களது நிறுவனத்திற்கு பெயரும், பணமும் வர வேண்டும் என நினைக்கின்றனவே தவிர ஒரு தலைமுறையினரை உருவாக்குகிறோம் என்று மெனக்கெடுவதில்லை. 

அரசும், அதிகாரிகளும் இது குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை. இரண்டு அல்லது மூன்று  மாடிகள் ஏறிச் சென்று படிக்கும் மழலையர் வகுப்பு மாணவர்கள், விளையாட்டு மைதானம் இல்லாதது, அவசர கால வெளியேறும் வழி இல்லாதது, பாதுகாப்பு இல்லாத கைப்பிடி சுவர், திறமையில்லாத ஆசிரியர்கள் என சட்டங்கள் இருந்தாலும் அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை.

தமிழகத்தில் தற்போது ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து விடுமுறைகள் துவங்கிவிட்டன. இதனையொட்டி நடுத்தர குடும்பத்தினர் திருவிழாக்கள், உறவினர்கள் வீடுகள் என ஆயத்தமாகி வருகின்றனர். அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்கள் பிள்ளைகளையும் தாங்கள் செய்யும் வேலைகளுக்கு பழக்குகிறோம் என்ற பெயரில் அவர்களையும் பணிகளுக்கு அழைத்து செல்கின்றனர். ஆனால் பழக்கமில்லாத வேலைகளை செய்யும் போது பல நேரங்களில் அசம்பாவிதங்கள், விபரீதங்கள் ஏற்பட்டு விடுவதுண்டு.  

மின்சாரம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே அரசு கல்லூரி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தினமும் நூற்றுக்கணக்கானோர் கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், மிதவைக்குளம் புளியங்குளம் பகுதியில் வசித்து வரும் இரு கல்லூரி மாணவர்கள் விடுமுறை தினம் என்பதால், அரசு கலைக்கல்லூரில் செண்ட்ரிங் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாரத விதமாக வெல்டிங் வயரை மிதித்து விட்டனர்.

இந்த விபத்தில் 15 வயது  ஹரிஷ்குமார், 17 வயதான ரவிச்செல்வம் என இரு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த இரு மாணவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருமே 18 வயதைத் தொடாதவர்கள். குழந்தைத் தொழிலாளர்கள். சட்டம் என்ன செய்யப்போகிறது? கல்லூரி நிர்வாகம் இழப்பீடு தருவார்களா? பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பொருளாதார நிலையில் உள்ள குடும்பங்கள் சட்டப்போராட்டம் நடத்துமா? ஆள்பவர்களுக்கும், கடவுளுக்குமே வெளிச்சம்.

போலீஸ்

 இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் தொழிலாளர் நலத்துறைக்கு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.  தொழிலாளர் துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். குடும்ப சூழல் காரணமாக பள்ளி மாணவர்களை  விடுமுறையில் கட்டுமானப்பணிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web