ஜம்முகாஷ்மீரில் துப்பாக்கிச்சூடு... 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை, 2 ராணுவ வீரர்கள் பலி!
காஷ்மீர் மாநிலத்தில் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட கடார் காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் ராணுவம், சி.ஆர்.பி.எப். மற்றும் காஷ்மீர் போலீசாரைக்கொண்ட கூட்டுப்படை நேற்று அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீரர்கள் மீது மறைந்திருந்த பயங்கரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத்தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த பயங்கர மோதலில் ராணுவ அதிகாரி உட்பட 2 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் ஒரு பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தார். ராணுவம் அந்த வீரர்களை சுபேதார் பெர்பத் கவுர் மற்றும் லான்ஸ் நாயக் நரேந்தர் சிந்து என அடையாளம் கண்டுள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவம், “தேசத்திற்காகப் பணியாற்றிய துணிச்சலான வீரர்களான பெர்பத் கவுர் மற்றும் நரேந்தர் சிந்து ஆகியோரின் உயர்ந்த தியாகத்தை ராணுவம் கௌரவிக்கிறது. அவர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் என்றென்றும் நம்மை ஊக்குவிக்கும்.

இந்திய ராணுவம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், துயரமடைந்த அவர்களின் குடும்பங்களுடன் உடன் நிற்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது” என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது சம்பவ இடத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை நீடித்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
