ராட்சத அலையில் சிக்கிய 2 சுற்றுலாப் பயணிகள் பலி!

 
நீச்சல்

 கோடை காலம் தொடங்கி வெயில் கொளுத்தி வரும் நிலையில்  மக்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களில் குவிந்து வருகின்றனர்.  கடந்த 2 நாட்களாக கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவும், சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த 16பேர் கொண்ட குழு ஆன்மீக சுற்றுலாவாக கன்னியாகுமரி வந்தனர். அவர்கள் குளச்சல் அருகே கோடிமுனை மீனவ கிராமத்தில் உள்ள ஆலயத்தை சுற்றிப்பார்த்து விட்டு மதிய உணவு ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

கன்னியாகுமரி


அந்த குழுவில் இருந்த மனோஜ்குமார், விசூஸ் இருவரும்  கடற்கரைக்கு சென்று கடலில் உள்ள பாறை மீது ஏறி நின்று கடல் அலைகளை பார்த்து ரசித்துள்ளனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கிய இருவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு சில நிமிடங்களில்  மாயமாகினர். இந்நிலையில் தகவல் அறிந்து வந்த மீனவர்கள் படகுகள் மூலம் தேடி படுகாயங்களுடன் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

நீச்சல்


இருவரையும் பொதுமக்கள் பைக் மற்றும் கார் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரையும் பரிசோதித்தனர்.  மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  இருவரின் சடலத்தையும் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த இடத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் கடல்அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web