எதிர் எதிரே சென்ற 2 லாரிகள் நேருக்கு நேர் மோதல் !

 
லாரி


 
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது  எம்ஆர்எப். தொழிற்சாலைக்கு கார்பன் துகள்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்கவேல் ஓட்டிச்சென்றார். அதே நேரத்தில்  திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த சிமென்ட் கலவை லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியதில் லாரிகளின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.  

போலீசார் கலவரம் காவல்துறை மறியல் போராட்டம்

சிமென்ட் கலவை லாரியை ஓட்டிவந்த டிரைவர் குருமூர்த்தி  2 லாரிகள் இடையே சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தார்.இந்த விபத்தால் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகன ஓட்டிகள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. 

போலீஸ்

இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில்  தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து ஜேசிபி உதவியுடன் 2  லாரிகள் இடையே சிக்கியிருந்த குருமூர்த்தியை பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர் எந்தவித காயம் இன்றி தப்பினார். இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?