பரபரப்பு... தவெக மாநாட்டு திடலில் 2 தொண்டர்கள் மயக்கம்.!
தவெக மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து அக்கட்சியின் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, விஜய்யின் பேச்சை கேட்கவும், அவரை பார்க்கவும் மிகுந்த ஆவலுடன் இருக்கும் தொண்டர்கள் முன் வரிசையில் இடம் பிடிக்க துடிக்கின்றனர்.

இதனால் மாநாட்டு பந்தலுக்குள் செல்ல முறையான பாதைகளை விட்டு விட்டு 10 அடி உயர தடுப்புகளை தாண்டி தொண்டர்கள் செல்கின்றனர். தற்பொழுது, மாநாடு திடலில் தொண்டர்கள் 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவக்குழு சிகிச்சை அளிக்கிறது. மாநாட்டில் குடிநீர் வசதி குறைபாடு மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக தொண்டர்கள் சிரமத்திற்கு இருப்பதாகவும் இதனால் சிலர் மயக்கம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள கூட்டம் கூட்டமாக அக்கட்சியின் தொண்டர்கள் படையெடுத்து வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஒருபுறம் எனில் மற்றொருபுறம் வெயிலும் கொளுத்தி வருகிறது. இதனால், தவெக தொண்டர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
