தென்னை மரம் முறிந்து விழுந்து 2 பெண்கள் பலி... பெரும் சோகம்!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் குனத்துக்கல் கிராமத்தில் வசித்து வருபவர் வசந்தா. 65 வயதான இவருக்கு 64 வயதில் சந்திரிகா என்ற தோழி. இருவரும் மகாத்மா காந்தி 100 நாள் தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்து வந்தனர்.

இருவரும் சக பணியாளர்களுடன் இன்று வழக்கம்போல் குனத்துக்கல் கிராமத்தில் வேலை செய்துவிட்டு மதிய உணவுக்கு பிறகு வேலை நடைபெறும் பகுதிக்கு அருகே உள்ள தென்னை தோட்டத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். தென்னை மரத்தின் அருகே நிழலில் படுத்து அனைவரும் தூங்கிவிட்டனர். தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தென்னை மரம் முறிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் வசந்தா, சந்திரிகா உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வசந்தா, சந்திரிகா ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
