பெரும் சோகம்... கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள், ஒரு குழந்தை பரிதாப பலி!!

 
தசரா

இந்தியா முழுவதும் தசரா பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 2 பெண்களும், ஒரு குழந்தையும் உயிரிழந்தது. 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  காயமடைந்தவர்கள் தற்போது சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குலசேகரப்பட்டினம் தசரா நடனம் நாட்டுப்புற

ராஜா தள துர்கா பூஜை  ‘மகா நவமி’ கொண்டாட்டங்கள் மற்றும் களியாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக காவல்துறையினர்   தெரிவித்துள்ளனர்.
மேலும், கோபால்கஞ்ச் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வர்ண பிரபாத் ” கூட்ட நெரிசலுக்கு மத்தியில் குழந்தை விழுந்துள்ளது,

குலசேகரப்பட்டினம் தசரா நடனம் நாட்டுப்புற

அந்த குழந்தையை காப்பாற்றும் முயற்சியில், இரண்டு பெண்களும் கீழே விழுந்து, எழுந்திருக்க முடியாமல் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் எனக் கூறினர். இந்நிலையில், துர்கா பூஜையின் போது நடைபெற்ற  இந்த சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web