கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளிகள் 2 பேர் பலி!

 
நிலச்சரிவு
 


 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்  ரியாசி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளிகள் 2  பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரகண்ட் நிலச்சரிவு

செவ்வாய் இரவு மற்றும் புதன்கிழமை அதிகாலை மஹோர் தாலுகா படோரா மலைப் பகுதியில் உள்ள சிவபெருமான் கோயில் அருகே இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கோவிலுக்கு செல்லும் பாதையை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவரும், நிலச்சரிவு ஏற்பட்டபோது ஒரு கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு

பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரால் இருவரின் உடல்களும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு  பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில்  ஒருவர் துலி கலவனைச் சேர்ந்த ரஷ்பால் சிங்(26) மற்றும் மற்றொருவர் செனானியைச் சேர்ந்த ரவிக்குமார்(23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?