நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வு... இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டணை!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நாளை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நாள் வரை தேர்தல் விதிகளை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் ஊடகங்கள் ,பேஸ்புக் ,வாட்ஸ் அப், எக்ஸ் வலைத்தளம் போன்ற சமூக வலைத்தளங்கள் என எந்த வகையிலும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யக்கூடாது. நாளை மாலை 6:00 மணிக்கு பிரச்சாரம் முடிந்தவுடன் தொகுதி சாராத வெளியூர் நபர்கள் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும், ஹோட்டல்கள் விடுதிகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்பதை ஹோட்டல் நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

தேர்தல் தொடர்பான கூட்டம் , ஊர்வலம் நடத்தவோ அதில் வேட்பாளர் பங்கேற்கவோ கூடாது. இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் திரையரங்குகள் மூலம் பரப்புரை செய்யக்கூடாது . விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
