சாலையோர மரத்தில் வாகனம் மோதி 2 இளைஞர்கள் பலி!

 
மனோஜ்
 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பச்ச குளம் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர், சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கருணாவூர்  கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் மனோஜ் (19), மணிகண்டன் என்பவரின் மகன் பிரசாந்த் (19) இருவரும் இன்று இரவு பச்ச குளம் கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவை காண்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

மனோஜ்

வாகனத்தை மனோஜ் ஓட்டி சென்றுள்ளார். இருசக்கர வாகனம்  பச்சகுளம் கிராமம் அருகே சென்றபோது சாலை ஓரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த  பிரசாந்த் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மனோஜ்

இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற மனோஜ் காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மனோஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்துக்கான காரணம் குறித்து தேவங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web