இந்தியா முழுவதும் 20 லட்சம் செல்போன் எண்கள் முடக்க... தொலைத் தொடர்பு துறை திடீர் உத்தரவு!

 
தொலைத் தொடர்பு

 சமீபகாலமாக தொலைத்தொடர்பு மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்காக  தொலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில போலீசாரும் இணைந்து கூட்டு ஆய்வு நடவடிக்கைகளை நடத்தினர். இதில் 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்ததில் இந்த செல்போன்கள் மூலம் 20 லட்சம் எண்களை பயன்படுத்தி மேற்படி குற்றங்கள் மற்றும் மோசடி அரங்கேறியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு

இந்த  எண்கள் நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்தவை என்பது தான் அதிர்ச்சிகரமான தகவல்.  இந்த 28,200 செல்போன் எண்களை உடனடியாக முடக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.  20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவை என கண்டறியப்படும் இணைப்புகளை உடனடியாக எந்தக் கேள்வியுமின்றி துண்டிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு

பொது பாதுகாப்பு, தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் உண்மைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதி செய்யும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை மற்றும் மாநில போலீசார் இணைந்து இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன .மோசடி நபர்களின் நெட்வொர்க்கை கூண்டோடு அகற்றுவதற்காகவும்,   டிஜிட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்கவும்  இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web