அதிரடி சரவெடி....அரசு ஊழியர்களுக்கு 20% போனஸ்...!!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் “C” மற்றும் “D” பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் 8.33% மற்றும் கருணைத் தொகை 11.67% ஆக 20% 2023-224ல் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20% சதவீதம் வழங்கப்படும். தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத் தொகையாக வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49023 பணியாளர்களுக்கு ரூ.29/- கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் “ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!