தமிழகத்தில் ஒரே நாளில் 20 டன் தங்க நகைகள் விற்பனை... களைகட்டிய அட்சய திருதியை வியாபாரம்!

 
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் அட்சய திருதியை முன்னிட்டு சுமார் 20 டன் தங்க நகைகள் விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 30 சதவிகிதம் அதிகம் விற்பனையானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தங்கம்

நேற்று ஒரே நாளில் சுமார் 20,000 கிலோ நகைகள் விற்பனைச் செய்யப்பட்டுள்ளது. இதன் தோராய மதிப்பு சுமார்  14,000 கோடி ரூபாய்.  கடந்த 10 நாட்களுக்கு முன்பிருந்தே அட்சயதிருதியை முன்னிட்டு நகைக்கடைகளில் வியாபாரம் களைக்கட்ட துவங்கியது. பலரும் நேற்று டெலிவரி எடுத்துக் கொள்ளும் வகையில் 10 நாட்களுக்கு முன்பிருந்தே முன் 10 சதவீதம் முன்பணம் செலுத்தி வந்தனர். 

தங்கம்

அட்சய திருதியை முன்னிட்டு, தங்கத்தின் எடைக்கு எடை வெள்ளி இலவசம், சிறப்பு தள்ளுபடி, செய்கூலியில் தள்ளுபடி என்று நிறைய விதவிதமான வியாபார யுக்திகளுடன் நகைக்கடைகள் இல்லத்தரசிகளை தங்கள் கடைகளுக்கு வர வைத்தன.  பொதுமக்கள் அதிகளவில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டியதால், நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை தங்கம் விலை உயர்ந்தது. அட்சய திருதியை ஆராவாரம் முடிந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைய துவங்கியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web