நாளை ஜூலை 1 முதல் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்! உற்சாகத்தில் மக்கள்!

 
மின்சாரம்

இலவசங்களை வாக்காளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கும் தேர்தல் அறிக்கையை தமிழகம் ஆரம்பித்து வைத்தது. இந்த பழக்கம் இப்போது நாடு முழுவதுமே அரசியல்வாதிகளிடையே பிரபலமடைந்து வருகிறது. இலவச மிக்ஸி, க்ரைண்டர், டிவி, சலுகை விலையில் உணவகங்கள், குடிநீர் பாட்டில்கள், மருந்துகள் என்று சென்ற நிலையில், இப்போது மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் வரையில் பல மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ளன.

தமிழகத்தில் இலவசமாக வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் நடைமுறையில் உள்ள நிலையில், கடந்த கர்நாடக மாநில தேர்தலில், 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பது தேர்தல் அறிக்கையில் பிரதானமாக இருந்தது.

முதல்வர் சித்தாராமையா தலைமையில் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், நாளை ஜூலை 1ம் தேதி முதல் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வணிக நிறுவனங்களுக்கும் இந்த இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

மின்சாரம்

தேர்தல் வாக்குறுதிகளில் 5 வாக்குறுதிகள் முக்கியமானதாக பேசப்பட்டன. இந்த 5 தேர்தல் வாக்குறுதிகளையும் நடப்பு நிதியாண்டிலேயே அடுத்தடுத்து செயல்படுத்தப்படும் ன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். 

குடும்பத்தலைவிகள்1000
முக்கியமான வாக்குறுதிகளான குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.2000 பணம் வழங்குவது, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் ரூ.3000 பணம் வழங்கப்படும் அதே போன்று பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 பணம் வழங்கப்படும். கர்நாடகாவில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் தோறும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும். கர்நாடகாவில் மகளிருக்கு பேருந்தில் டிக்கெட்டில்லா இலவச பயணம், அனைத்து வீடுகளுக்கும் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று முக்கியமான வாக்குறுதிகள் அனைத்தும் இந்த நிதியாண்டிலேயே நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி கூறியுள்ளார்.

இவற்றில் கர்நாடகாவில் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்து விட்ட நிலையில், நாளை முதல் 200 யூனிட் இலவச மின்சார திட்டமும் நடைமுறைக்கு வருகிறது. பிற வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என முதல்வர் சித்தாராமையா அறிவித்துள்ளார். 

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்