வேன் கவிழ்ந்து விபத்து... நடுரோட்டில் 2000 முட்டைகள் உடைந்து நாசம்!

 
லாரி விபத்து

தாம்பரம் நகராட்சிக்கு அடுத்த சேலையூரில் முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்திற்க்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 2,000 முட்டைகள் உடைந்து வீணாகின. தாம்பரம் அடுத்த சேலையூர் கேம் ரோடு பகுதியில் AKG முட்டை விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தப்பகுதியில் இருந்து  மாடம்பாக்கம், காமராஜர்புரம் உட்பட சுற்றுவட்டாரப்  பகுதிகளுக்கு முட்டை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விநியோகத்தை பொறுத்தவரை முட்டைகள்  மூடப்பட்ட மினிவேனில்  ஏற்றப்பட்டு பகுதி வாரியாக பிரித்து கொடுக்கப்படும்.  

முட்டை

ஓட்டுநர் காசி ராஜன் என்பவர் வேளச்சேரி மெயின் ரோடு வழியாக இந்த வேனை ஓட்டி சென்றபொது முன்பக்க அச்சு திடீரென முறிந்து நிலை தடுமாறி வேன் கவிந்தது.இந்த திடீர் விபத்தில் வேனில் இருந்த ஓட்டுனநர் காசிராஜன் மற்றும் அவரது உதவியாளர் இருவரும்  சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டனர்.  வேன் கவிழ்ந்ததை அடுத்து சாலையில் 2000 முட்டைகளும் உடைந்து ஓடின. இதனால் சாலை முழுவதும் வழவழ கொழகொழவென ஆனது. இதனால் வேறு ஏதும் விபத்துகள் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து போலீசார் முட்டை வழவழப்பில் அங்கிருந்த மண்ணை கொட்டி ஓரளவு சீர் செய்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு  அந்த பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web