இம்மாத இறுதிக்குள் வங்கிக்கணக்கில் ரூ2000/-!

இந்தியாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமராக 3 வது முறையாக மோடி பதவியேற்றுள்ளார். இம்முறை விவசாயிகளுக்கு நலனுக்கு தான் முக்கியத்துவம் என்பதை அறிவிக்கும் வகையில் விவசாயிகள் நலன் காக்கும் திட்டத்தில் முதல் கையெழுத்தை இட்டுள்ளார். இந்தியாவில் விவசாயிகளுக்கு பிஎம்பிகிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ரூ6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை ஒவ்வொரு ஆண்டும் ரூ 2000 வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 16 தவணைகள் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் மக்களிடையே 17வது தவணை குறித்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்று உள்ள நிலையில் 17வது தவணை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இம்மாதம் இறுதிக்குள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திட்டத்திற்கு விவசாயிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
அதே போல் PMAYG திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் ஏழைகளுக்கு 2 கோடி வீடுகளை கட்டி தர மத்திய அரசு ஒப்புதல் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று மாலை நடைபெறவுள்ள முதல் அமைச்சரவை கூட்டத்தில் இலாகா தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட அடுத்த 5 ஆண்டுக்குள் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்ற திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்படும் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!