அதிர்ச்சி... 2000 கிலோ கஞ்சா பறிமுதல்... கொள்ளிக்கட்டையால் எரித்து சாம்பலாக்கிய பெண் எஸ்.பி!
தெலுங்கானாவில் சுமார் ரூ.5 கோடி மதிப்புடைய 2,043 கிலோ கஞ்சா நல்கொண்டா மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சாவை நல்கொண்டா மாவட்டம் பெண் எஸ்பி சந்தா தீப்தி, ஊரின் ஒதுக்குப்புறத்தில் வனப்பகுதியில் வைத்து கொள்ளிக்கட்டையால் தீ வைத்து எரித்து சாம்பலாக்கி அழித்தார்.
Nalgonda SP Chandana Deepthi sets 2 tonnes of Ganja on fire.
— Sudhakar Udumula (@sudhakarudumula) April 26, 2024
5 crore worth of ganja, weighing 2043 kg seized in 39 NDPS cases in Nalgonda, was burned in the presence of the Drug Destruction Committee.#Telangana #Nalgonda pic.twitter.com/AxKKRx5YBg
தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில், 39 பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாப் பொருட்கள் 2043 கிலோ இருந்த நிலையில், ரூ.5 கோடி மதிப்புள்ள இந்த கஞ்சா பொருட்களை போதைப்பொருள் தடுப்பு குழு அதிகாரிகள் முன்னிலையில் நல்கொண்டா மாவட்ட எஸ்.பி., சந்தா தீப்தி கொள்ளிக்கட்டையால் தீ வைத்து எரிந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரும் அவரது செயலுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!