அதிர்ச்சி... ஆவின் பால் பண்ணையில் உற்பத்தி நிறுத்தம்... 2,00,000 லிட்டர் பால் விநியோகம் பாதிப்பு!

 
ஆவின்

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 2 லட்சம் லிட்டர் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை மாதவரத்தில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கிருந்து தினமும் 4.50 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. 

ஆவின்

இந்நிலையில் மாதவரம் பால் பண்ணையில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சுமார் 30 வாகனங்கள் விநியோகத்துக்கு செல்லாமல் பால் பண்ணை வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக சென்னையில் 2 லட்சம் லிட்டர் பால் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளி மாவட்டங்களிலிருந்து மாதவரம் பால் பண்ணைக்கு வர வேண்டிய தினசரி பால் வரத்து வராததாலும், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆவின்

இதன் காரணமாக காலை 7 மணிக்கு பால் கொண்டு செல்ல வேண்டிய வாகனங்கள் புறப்படவில்லை என்றும், அதற்கு பிறகு பால் உற்பத்தி நடைபெற்றாலும் காலை 11 மணிக்கு பிறகே பால் விநியோகம் துவங்கும் என்றும் மாதவரம் ஆவின் பால் பண்ணை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆவின் பால் உற்பத்தி, விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web