2024ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை பட்டியல் வெளியீடு!!

 
2024

ஒவ்வொரு ஆண்டும் தொடங்குவதற்கு முன்பே அரசின்பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படும்.  அந்த வகையில்  2023 முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட 24 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து   தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்  ”மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின்  அறிவிப்பில் வெளியிடப்பட்ட பொதுவிடுமுறை நாட்களுடன்  கீழ், பொது விடுமுறை நாட்களாக  பின்வரும் நாட்களும், 2024ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாக கருதப்படும்” என தமிழக அரசு  அறிவிக்கிறது.
அதன்படி 
2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை பட்டியல்
ஜனவரி.1 - திங்கட்கிழமை - ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி.15 - திங்கட்கிழமை - பொங்கல்
ஜனவரி.16 - செவ்வாய்க்கிழமை - திருவள்ளுவர் தினம்
ஜனவரி.17 - புதன்கிழமை - உழவர் திருநாள்

விடுமுறை


ஜனவரி.25 - வியாழக்கிழமை - தைப்பூசம்
ஜனவரி.26 - வெள்ளிக்கிழமை - குடியரசு தினம்
மார்ச்.29 - வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி
ஏப்ரல் 1 - திங்கட்கிழமை - வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக / கூட்டுறவு வங்கிகள்)
ஏப்ரல் 9 - செவ்வாய்க்கிழமை - தெலுங்கு வருடப் பிறப்பு
ஏப்ரல் 11 - வியாழக்கிழமை - ரம்ஜான்


ஏப்ரல் 14 - ஞாயிற்றுக்கிழமை - தமிழ்ப் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம்
ஏப்ரல்21 -ஞாயிற்றுக்கிழமை - மகாவீரர் ஜெயந்தி
ஏப்ரல் 21 - ஞாயிற்றுக்கிழமை - மே தினம்
ஜுன்.17 - திங்கட்கிழமை - பக்ரீத்
ஜுலை.17 - புதன்கிழமை - மொகரம்
ஆகஸ்ட் 15 - வியாழக்கிழமை - சுதந்திர தினம்

2024


ஆகஸ்ட் 26 - திங்கட்கிழமை - கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 7 - சனிக்கிழமை - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 16 - திங்கட்கிழமை - மிலாதுன் நபி
அக்டோபர் 2 - புதன்கிழமை - காந்தி ஜெயந்தி
அக்டோபர் 11 - வெள்ளிக்கிழமை - ஆயுத பூஜை
அக்டோபர் 12 - சனிக்கிழமை - விஜய தசமி
அக்டோபர் 31 - வியாழக்கிழமை- தீபாவளி
டிசம்பர்  25 - புதன்கிழமை - கிறிஸ்துமஸ்
தமிழகத்திலுள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web