மாணவர்களே உஷார்... இந்தியா முழுவதும் 21 போலிப் பல்கலைக்கழகங்கள்... பட்டியல் வெளியீடு !

 
யுஜிசி

 இந்தியா முழுவதும் 2023 -24ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதனையடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மும்மூரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை பெறவும், அதனை உறுதி செய்யவும்  இந்தியா முழுவதும் பல்கலை மானிய குழு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் போலி பல்கலை பட்டியலை யுஜிசி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி தேசிய அளவில் சுமார் 21 பல்கலைகள் போலி பல்கலைக்கழகங்கள் உள்ளதாக தற்போது  அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்லூரி பெண்கள் யுஜிசி

இதில் ஆந்திரா 2, டெல்லி 8, மகாராஷ்டிரா, கர்நாடகா, புதுச்சேரியில் ஒரு பல்கலை வீதமும், உத்திரப்பிரதேசத்தில் 4, மேற்கு வங்கத்தில் 2 மற்றும் கேரளாவில் 2 உட்பட 21 பல்கலைக்கழகங்கள் போலி பல்கலைக்கழகங்களாக அறியப்பட்டுள்ளன.  இந்த பட்டியலில் தமிழகத்தில் எந்த ஒரு பல்கலைக்கழகமும்  இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற  மாநிலங்களில் படிப்புக்காக செல்லும் மாணவர்கள் இந்த பட்டியலை உறுதிப்படுத்திய பிறகே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள  https://www.ugc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம்  அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!