என்னங்கடா இது.... 200க்கு 212 மதிப்பெண் ... வைரலாகும் மாணவியின் மார்க் ஷீட்!

 
மதிப்பெண்பட்டியல்
 

குஜராத் மாநிலத்தில் தாஹோட் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளியில் அதே பகுதியில் இருக்கும் பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்நிலையில் இங்கு சமீபத்தில்  தொடக்கப்பள்ளி  மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்ற நிலையில், ஒரு மாணவியின் மதிப்பெண்  பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மதிப்பெண்

இந்த பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வரும் மாணவி வன்ஷிபன் மணிஷ்பாய். இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு 6 பாடங்களுக்கு 1000 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்பட்டது. 2 பாடங்களுக்கு 100 மற்ற 4 பாடங்களுக்கு 200 ஆக தேர்வு நடத்தப்பட்டது.  இந்த தேர்வில் இந்த மாணவி மொத்தம் 956 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.  
குறிப்பாக 2 பாடங்களில் 200-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றதாக  மதிப்பெண் அட்டையில் குறிப்பிடப்பட்டு இருப்பது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில மொழிப் பாடத்தில் 200க்கு 211 மதிப்பெண்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதே போல் கணிதத்தில் 200க்கு 212  மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது.

மாணவிகள்
அந்த மதிப்பெண் தவறாக இடம் பெற்றுவிட்டது. குறிப்பிட்ட  மாணவி குஜராத்தியில் 191மதிப்பெண்கள்   கணிதத்தில் 190  மதிப்பெண் எடுத்திருப்பதாகவும்  அவர் 1000-க்கு 934 மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணை நடத்த  மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஏற்கனவே நீட் தேர்வு மோசடி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக ஆளும் குஜராத்தில் அதுவும் 4ம் வகுப்பு படிக்கும் மாணவியின் மதிப்பெண்ணில் குளறுபடி ஆனது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web