தமிழகம் முழுவதும் 22000 வேலை வாய்ப்புக்கள்... அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் 1076 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிக நீண்ட கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரை ஓரங்களில் 4 பெரிய துறைமுகங்கள், 17 சிறிய துறைமுகங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. நமது கடலோர வர்த்தகத்தை மேம்படுத்தவும், தொழில்நுட்ப வகையில் மேம்பாடு அடையச் செய்யவும் துறைமுக கட்டமைப்பு மிக மிக அவசியம். இதனை கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு மாநில துறைமுகம் மேம்பாட்டு கொள்கை 2023 வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது சென்னையில் நடைபெற உள்ள தொழில்துறை மாநாடு குறித்த விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த பிறகு தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசியுள்ளார். அதில் “ தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி வளர்ச்சி பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. டுத்ததாக 8 புதிய நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே தொடங்கப்பட்டு தற்போது விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி , ராணிப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ரூ7018 கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் 22,536 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் . அதே நேரத்தில் கடந்த 16 ஆண்டுகளாக கடல் சார் வணிகத்தில் முதலீடுகளை ஈர்க்கவும், வளர்ச்சி அடையச் செய்யவும் மாநிலங்களுக்கு இடையே பெரும் போட்டிகள் உருவாகி வருகின்றன. மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா, மாநிலங்களில் துறைமுக நடைமுறைகள் தமிழ்நாடு அரசு அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தமிழக துறைமுக மேம்பாட்டு கொள்கை 2023 உருவாக்கப்பட்டு இதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் முதலீட்டை ஈர்க்கவும் துறைமுக மேம்பாட்டு கொள்கை உருவாக்கப்படுவது அவசியமான ஒன்றாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!