230 கி.மீ. வேகம்... மெக்சிகோவை உருக்குலைத்த ஓடிஸ் புயல்… 27 பேர் பலி!
சுமார் 230 கி.மீ. வேகத்தில், மெக்சிகோவை தாக்கிய மிகவும் சக்தி வாய்ந்த ஓடிஸ் புயலால் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மொத்த நகரையும் ஒடிஸ் புயல் புரட்டிப் போட்டுள்ளது. பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Why is no one talking about the category 5 hurricane that just devastated Acapulco Guerrero, Mexico ???pic.twitter.com/sFF4yNPhNn
— taehyung mexicano (@taexico) October 28, 2023
Why is no one talking about the category 5 hurricane that just devastated Acapulco Guerrero, Mexico ???pic.twitter.com/sFF4yNPhNn
— taehyung mexicano (@taexico) October 28, 2023
பசிபிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள மெக்சிகோவை ஓடிஸ் புயல் புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக பிரபல சுற்றுலா தலமான அகாபுல்கோவை புயல் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த பகுதியில் சுமார் 10 லட்சம் பேர் வாழ்கின்றனர்.
அகாபுல்கோ நகரில், மணிக்கு 230 கி.மீ வேகத்தில் பலத்த புயற்காற்று வீசியதால், அகாபுல்கோ நகரம் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. வீடுகள், மின்கம்பங்கள், வாகனங்கள், மரங்கள், மொபைல் டவர்கள் உள்ளிட்டவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
கடந்த 80 வருடங்களில், அதாவது 1950-க்கு பிறகு இத்தனை வலுவான புயல் மெக்சிகோவில் வீசவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடிஸ் புயல் உருவான 12 மணி நேரத்திற்குள் கரையை கடந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரம் கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஓடிஸ் புயல் தாக்குதலில் அகாபுல்கோவில் 27 பேர் உயிரிழந்தனர். புயல் கரையை கடந்த பகுதிகளில் தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அதே போல், மின்கம்பங்கள் அனைத்தும் விழுந்து விட்டதால், மின் விநியோகம் சீராக சில நாட்களாகும் என்று கூறப்படுகிறது.
ஓடிஸ் புயல் விவசாய நிலங்களையும் விட்டுவைக்கவில்லை. விவசாயிகளின் மக்காச்சோள பயிர்கள் முற்றிலும் நாசமாகிவிட்டன. புயலால் உருக்குலைந்த அகாபுல்கோ நகரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர அதிகாரிகள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!