இன்று 24 ரயில்கள் ரத்து!! தவிக்கும் ரயில் பயணிகள்!!

 
ரயில்

ஜுன் 2ம் தேதி இரவு ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் கோரமாண்டல் எக்ஸ்பிரஸ், ஹாவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது . இந்தியாவையே உலுக்கிய இந்த த கோர ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மீட்பு பணிகள் நிறைவடைந்து அந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தபோதிலும் இந்த நாசவேலைக்கு காரணமானவர்கள் குறித்து ஆராய சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் சிக்னல் அறைகளுக்கு இரட்டை பூட்டு முறையை நடைமுறைப்படுத்த இந்தியன் ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

ரயில்

மேலும் அனைத்து ரயில் வழித்தடங்களும் ஆய்வு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தினசரி பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தென்கிழக்கு ரயில்வே நிர்வாகத்தில்  இன்று  24 விரைவு ரயில்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.பஹநக பஜார் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், இன்று 24 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்

எனவும்,   ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் மொத்த இன்டர் லாக்கிங் அமைப்பும் மாற்றப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹவுரா-சிஎஸ்எம்டி கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.05க்கு பதிலாக மாலை 4.05 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்படும். ஹவுரா-சிஎஸ்எம்டி  அஞ்சல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.20 மணிக்கு ஹவுராவிலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  வெள்ளிக்கிழமை SER தண்டவாளங்களை சரிசெய்வதற்காக குறைந்தது 40 ரயில்களை ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web