திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி!
திருமலை கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக திருப்பதியில் விஷ்ணு நிவாசத்தில் டிக்கெட் கவுண்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது, 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திர உள்துறை அமைச்சர் அனிதா அறிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கான டோக்கன் பெற ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலர் காயமடைந்துள்ளனர்.
திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் பிரவேசத்திற்கு தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இந்த இலவச தரிசன டோக்கனைப் பெறுவதற்காக நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சேலத்தை சேர்ந்த மல்லிகா என்ற பெண் உட்பட 6 பக்தர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!