BREAKING: குட் நியூஸ்... அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 25% உயர்வு!

 
அரசு ஊழியர்கள்
 


அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், வீட்டு வாடகைப்படி, கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது.

புதுவையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்திலும், ஜூலை மாதத்திலும் என வருடத்திற்கு இருமுறை அகவிலை உயர்த்தப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள விகிதத்தில், 6 வகையான அகவிலைப்படி 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.  தற்போது அகவிலைப்படியின் சீலிங் ரேட்டினை மாற்றியமைத்து நிதித் துறை உத்தரவிட்டுள்ளது. 

அதிர்ச்சி!! நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! இந்த வாரம் 3 நாட்கள்  வங்கிகள் செயல்படாது!!
அரசு ஊழியர்களின் போக்குவரத்துப்படி, வீட்டு வாடகைப்படி சீலிங் ரேட்களும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன. 
இதுவரை அரசு ஊழியர்களுக்கு குழந்தைகளுக்கான படிப்பு அகவிலைப்படி ரூ. 2,250 ரூபாய், ஓட்டல் சப்ஸிடி ரூ.6,750, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான கல்வி அகவிலைப்படி ரூ.4,500 வழங்கப்பட்டு வந்த  நிலையில், இவற்றையும் 25 சதவீதம் அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 
மாற்றியமைக்கப்பட்ட புதிய அகவிலை உயர்வு ஜனவரி 1ம் தேதி 2024 முதல் அமலுக்கு வருவதாக  புதுச்சேரி நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web