கொள்ளிடம் ஆற்றில் 25 மணல் குவாரிகள்... கல்லணைக்கு பாதிப்பு... அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

 
கொள்ளிடம் கல்லணை

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவாகுமார் என்பவர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தஞ்சை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் அமைந்துள்ள கல்லணை 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் கரிகால சோழனால் கட்டப்பட்டது. பல நூறு ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு, இப்போது வரை அனைவரும் வியந்து பார்க்கும் அணையாக கல்லணை உள்ளது. கல்லணை அருகே 25 இடங்களில் மணல் குவாரி அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இதனால் மிகவும் பழமையான கல்லணை பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்து மணல் குவாரி அமைக்க தடை கேட்டார். பாரம்பரியமான கல்லணையைக் காப்பாற்ற கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்க கூடாது என்றும் உத்தரவிட வேண்டும் என்று ஜீவாகுமார் தனது மனுவில் கூறியிருந்தார்.

கொள்ளிடம் கல்லணை

இந்த மனு ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி விக்டோரியா கவுரி ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், "கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் பாரம்பரியமான, கல்லணை சேதம் அடைய வாய்ப்பு உள்ளது" என்றனர். அரசு வக்கீல், 'கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்படவில்லை. கொள்ளிடம் ஆற்றை சுத்தம் செய்து 25 இடங்களில் குடிநீர் எடுப்பதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. 

ஏற்கனவே கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி கொடுத்தது மட்டுமே அமலில் உள்ளது என்றார். இதனால் தான் கல்லணை பாலம் சேதமடைந்தது. கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்க க்கூடாது என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

கொள்ளிடம் கல்லணை

இதையடுத்து நீதிபதிகள், "கொள்ளிடம் ஆற்றில் எந்த மணல் குவாரியும் அமைக்கப்படவில்லை என்று அரசுத் தெரிவித்த பதிலை, பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டும், வழக்கை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web