மதுரையில் அதிர்ச்சி... பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

 
வீடு
 மதுரையில் பெண் காவல் ஆய்வாளராக பணிபுரிபவரின் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 250 சரவன் நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வீடு
மதுரை அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம் மீனாட்சி நகரில் வசித்து வருபவர்  ஷர்மிளா. இவர் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பணிக்குச் சென்றுவிட்டு இன்று காலை வீட்டுக்குத் திரும்பிய ஷர்மிளா, தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

நகை கொள்ளை
வீட்டின் உள்ளே கதவை உடைத்து சென்ற கொள்ளையர்கள், பீரோவை உடைத்து அதிலிருந்த 250 சவரன் நகைகளையும், ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் ஷர்மிளா புகாரளித்தார்.
அதன் பின்னர் கைரேகை நிபுணர்களைக் கொண்டு வீட்டின் கதவிலும், பீரோவிலும் பதிவாகியிருந்த கைரேகை உள்ளிட்ட தடயங்களைப் போலீசார் சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து, 250 சவரன் நகைகளைக் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web