250 மாணவிகள் தாம்பாளத் தட்டில் நின்று பரதநாட்டியம் ஆடி சாதனை!

 
சேலம்

சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் உலக சாதனை பாரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  மதுரை ருத்ரா நாட்டிய கலைக்கூடம் சார்பில் 3 முதல் 15 வயது வரையுள்ள 250 மாணவிகள், கோயில் வளாகத்தில் தாம்பாளத் தட்டில் நின்றபடி பரத நாட்டியம் ஆடினர்.

சேலம்

மொத்தம் 15 வகையான நாட்டியங்களை பாவனைகளுடன் தாம்பாளத் தட்டில் நின்றாபடியே ஆடினர். இந்த ஆட்டத்தால்  பார்வையாளர்கள் பரவசமடைந்தனர்.   இடைவிடாது 2 மணி நேரம் நடனமாடிய மாணவிகளின் ஆட்டத்தை நோபல் உலக சாதனை புத்தகம் அங்கிகரித்து, உலக சாதனையாக அறிவித்துள்ளது.

 இதையடுத்து அதற்கான சான்றையும் வழங்கியுள்ளது. மேலும் நாட்டிய மாணவிகள் அனைவருக்கும் நாட்டிய மணிகள் என்ற சான்றிதழும்  வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவிகளின் பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web