அதிர்ச்சி.... 26 வயதில் உலக தடகள சாம்பியன் திடீர் மரணம்!
26 வயசு எல்லாம் மரணமடைகிற வயதா என்று விளையாட்டு ஆர்வலர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கென்யா நாட்டை சேர்ந்த உலக தடகள வீரர் கிபிகோன் பெட் திடீர் மரணமடைந்திருப்பது விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் கலந்து கொண்டு கிபிகோன் பெட் (Kipyegon Bett) வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார். நீண்ட ற கிபொகோன் பெட் நீண்ட காலமாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகளில் அவதிப்பட்டு, அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்தார்.
2016 World U20 Champion in Bydgoszcz, Poland, Kipyegon Bett is no more.
— Dr. Kipkoech Cheruiyot (@kipkoecheruiyot) October 6, 2024
Rest in peace. pic.twitter.com/QW6GqDh0WJ
இந்நிலையில் அவரது கல்லீரல் மற்றும் சீறுநீரகம் முழுவதுமாக செயலிழந்ததைத் தொடர்ந்து அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கென்யாவின் தடகள வீரர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய கிபிகோன் பெட் கடந்த 2018ம் ஆண்டு உலக தடகள ஒருமைப்பாடு பிரிவால் தடை செய்யபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எரித்ரோபொய்டின் என்ற ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக, ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய கிபிகோன் பெட், அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் தடகளப் போட்டிகளில் பங்கு பெறுவதில் இருந்து தடை செய்யப்பட்டிருந்தார்.
4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்த காரணத்தால் அவரால் 2020ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும், அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியவில்லை.
இதனால் அதிகளவிலான மன அழுத்தத்திற்குள்ளான கிபிகோன் அதன் பின்னர் மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். அதிகப்படியான மதுப்பழக்கத்தினார் கிபிகோன் உடல் பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கத் தொடங்கி உள்ளன. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் மீண்டும் உடல் பலவீனமான நிலையில், கடந்த வாரம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் மரணமடைந்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு போலந்தில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 800 மீட்டர் தடகளப் போட்டியில் கிபிகோன் பெட் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து 2017ல் லண்டனில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். கிபிகோன் பெட் மறைவுக்கு விளையாட்டு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
