27 பேர் அடுத்தடுத்து மாரடைப்பால் மரணம்... கொரோனா தடுப்பூசி காரணம்?

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஹாசன், சிக்கமகளூரு மற்றும் சிவமொக்கா மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் 27 பேர் மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது காரணமாக இருக்குமோ? என்ற மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இது குறித்து பெங்களூருவில் நேற்று முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் 'அவசர கதியில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது கூட மாரடைப்பால் மரணம் அடைவதற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.
மக்கள் யாருக்கேனும் நெஞ்சு வலி ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் உடல்நிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டாலோ, சுவாச பிரச்சினை ஏற்பட்டோலோ உடனடியாக அவர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த பிரச்சினை குறித்து சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவும், சிறப்பு மருத்துவ குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!