28 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்... தெற்கு ரயில்வே!

 
ரயில்

 கார்த்திகை மாதத் தொடக்கம் முதலே சபரிமலை சீசன் களைகட்ட தொடங்கிவிட்டது. இதனை முன்னிட்டு  28 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 11ம்  தேதி வரை சென்னை - திருச்சி செல்லும் ராக்போர்ட் அதிவிரைவு ரயிலும் (12653), ஜனவரி 1 முதல் பிப்ரவரி 12 வரை சென்னை - செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும் (12661), ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை மதுரையில் இருந்து வரும் சென்னை எழும்பூர் வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலும் (12638), மதுரையில் இருந்து வரும் சென்னை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலும் (12636) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும்.

ரயில்

மேலும் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 10 வரை செங்கோட்டை - தாம்பரம் வரும் அதிவிரைவு ரயிலும் (20684), ஜனவரி 2 முதல் பிப்ரவரி 9  வரை செங்கோட்டையில் இருந்து வரும் தாம்பரம் வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் (20682), ஜனவரி 1 முதல் பிப்ரவரி 11 வரை நாகர்கோவிலில் இருந்து வரும் தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலும்  ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை காரைக்காலில் இருந்து வரும் தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16176) மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் நின்று செல்லும். இதன்படி  மொத்தம் 28 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!