நீட் தேர்வு பயம்... விடுதி அறையில் 2ம் ஆண்டு பியூசி மாணவி தற்கொலை!

 
நீட் தேர்வு

 இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வு பயத்தால் 18 வயது 2 ம் ஆண்டு பியூசி மாணவி, சனிக்கிழமை இரவு  தனியார் கல்லூரியில் உள்ள தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.  இவர் நேற்று மே 5ம் தேதி   ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதுவதாக இருந்தது. இவருடைய பெற்றோர் கொடுத்த புகாரின்படி மாணவி  உடல்நலக்குறைவால் போராடி வருகிறார். அவர்  தொழில்முறை கல்லூரிகளில் சேருவதற்கான நீட் தேர்வில் மதிப்பெண் எடுக்க மாட்டாள் என்று பயந்திருந்தாள்.  இதனையடுத்து  18 வயதான அவரது அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிவிட்டார். இதனை அதிகாரிகள் உறுதி செய்தனர்.  

தூக்கிட்டு தற்கொலை


ஏப்ரல் 29ம் தேதி  கோட்டாவைச் சேர்ந்த நீட் தேர்வாளர் தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான அவர் ஹரியானாவின் ரோஹ்தக்கைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஒரு வருடமாக கோட்டாவின் குன்ஹாடி லாண்ட்மார்க் சிட்டியில் வசித்து வந்தார் மற்றும் நீட் தயாரிப்புக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டார். 2023ல் மொத்தம் 29 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டாதாக கூறப்படுகிறது.  

நீட் தேர்வு தற்கொலை
நீட் தேர்வு நேற்று மே 5, 2024 பிற்பகல்  2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்று மணி நேரம் 20 நிமிடங்களுக்கு நடத்தப்பட்டது. இத்தேர்வை இந்தியா முழுவதும்  24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். வினாக்கள்  மிதமான கடினமானதாக மதிப்பிடப்பட்டது. கடந்த ஆண்டை விட இயற்பியல் பிரிவு கடினமாகவும், வேதியியல் பாடம்  ஒட்டுமொத்தமாக எளிதாக இருந்தாலும் தாவரவியலில் சில தந்திரமான கேள்விகள் இருந்ததாக மாணவர்கள் கூறுகின்றனர்.  NCERT சிலபஸ் அடிப்படையில் கேள்வித்தாள் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web