காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தை மரணம்... தனியார் மருத்துவமனை மீது புகார்!

 
ரேலா

காய்ச்சலுக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 வயது குழந்தை உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை மீது பெற்றோரும், உறவினர்களும் புகாரளித்து மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூரைச் சேர்ந்தவர்கள் செல்வகுமார், ஷாலினி தம்பதியர். இவர்களின் 2 வயது மகள் தேஜஸ்ரீ  கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சேலையூர், பல்லாவரம் ஆகிய இரண்டு இடங்களில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைகாக நள்ளிரவில் குரோம்பேட்டையில் இருக்கும் ரேலா மருத்துவமனையில் அனுமதிகப்பட்டார். அப்போது 50 ஆயிரம் முன்பணம் கட்ட சென்னபோது ரூபாய் 10,000 முன்பணம் கட்டிய பெற்றோர், மீதி தொகையை காலையில் கட்டுவதாக கூறியுள்ளனர். 

குழந்தை உயிரிழப்பு

மருத்துவமனையில் 5 நாட்கள் தங்கினால் காய்ச்சல் குணமாகும் என மருத்துவர்கள் உறுதி கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், தங்களால் 5 நாட்களுக்கு பணம் கட்ட முடியாததால் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் செல்வதாக கூறியுள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதோடு, சிகிச்சைக் கட்டணமாக மேலும் ஒரு லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்றும், 10,000 ரூபாய் கட்டியது போக மீதி ரூ.90,000 கட்ட வேண்டுமென மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனை முன்பாக திரண்டு குழ்ந்தை தீடீரென உயிரிழந்தது எப்படி என கேள்வி எழுப்பினார்கள்.

இறந்த குழந்தை உயிருடன் வந்த நிகழ்வு

இது குறித்து தகவலறிந்த தாம்பரம் காவல் உதவி ஆணையாளர் சினிவாசன் தலைமையில் போலீசார்,  பெற்றோரிடமும், மருத்துவமனை நிர்வாகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, மீதி ரூ.90,000 கட்ட வேண்டாம் என கூறிய நிலையில் குழந்தை தேஜஸ்ரீ உடலை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இறந்த குழந்தைக்கு ரத்த தட்டணுக்கள் வெகுவாக குறைந்துள்ளதால் டெங்கு பாதிப்பால் குழந்தை உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web