அட கொடுமையே... பைபிள் வெச்சிருந்ததற்காக 2 வயசு குழந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை.. வடகொரியா அடாவடி!

 
வடகொரியா

உலகின் மர்மதேசமாக அழைக்கப்படுவது வடகொரியா. அந்நாட்டில் என்ன நடக்கிறது என்பது வெளியில் யாருக்கும் தெரியாது. வடகொரியாவின் அரசு ஊடகம் வெளியிடும் செய்தியே அவ்வப்போது வெளியாக வருகிறது. 

அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தையும் முன்னாள் அதிபருமான 2ஆம் கிம் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்தார். அவர் உயிரிழந்த 2 நாட்களுக்குப் பின்புதான் அந்த செய்தி வெளியுலகிற்கே தெரிந்தது. அந்த அளவுக்கு மர்மதேசமாக விளங்குகிறது. 

அதோடு வித்தியாசமான உத்தரவுகளுக்கு பெயர் பெற்ற நாடுகவும் உள்ளது. மேலும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளைல் ஈடுபடும் மக்களுக்கு மரண தண்டனைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 

வடகொரியா

இந்த நிலையில், பைபிள் வைத்திருந்தால் 2 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதுதான் தற்போதைய மர்மதேசத்தில் இருந்து வெளிவந்த அதிர்ச்சி செய்தியாக உள்ளது. சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில், வட கொரியாவில் 70,000 கிறிஸ்தவர்கள் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் இரண்டு வயது சிறுவனும் அடக்கம். கிறிஸ்தவ மதப் பழக்கவழக்கங்களை கடைபிடித்தற்காகவும், பைபிளை வைத்திருந்ததற்காகவும் அந்தக் குடும்பம் கைது செய்யப்பட்டது. அதில் இரண்டு வயது குழந்தை உட்பட ஒட்டுமொத்த அந்த குடும்பமும் 2009 முதல் ஆயுள் தண்டனை பெற்று அரசியல் சிறை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் மிக மோசமான நிலைமையில் இருப்பதாகவும், அவர்கள் பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் 90% அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமே பொறுப்பு, என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடகொரியா

மேலும், வட கொரிய அரசாங்கம் மதச் சடங்குகளில் ஈடுபடும், மதப் பொருட்களை வைத்திருக்கும், மத குருமார்களுடன் தொடர்பு வைத்திருக்கும் அல்லது மத நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும் நபர்களைத் துன்புறுத்துகிறது. நாடு கடத்தப்படலாம், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web