பயங்கரம்... லோடு வேன் , பைக் மீது மோதியதில் தூக்கி எறிந்து 3 சிறுவர்கள் துடிதுடித்து பலி!!

 
நவ்புல்

நாகப்பட்டினம் மாவட்டம்  வடக்கு தெருவில் வசித்து வருபவர் முகமது அப்துல்லா. இவரது மகன் ரிஷ்வான். இவர் திருவாரூரில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். அப்துல் முகமது மகன் பாசித்  கீழ்வேளூரில் ஐடிஐ படித்து வந்தார். கூத்தூர் புதுத்தெருவில் வசித்து வந்த   பாவா பக்ருதின் மகன் நவ்புல்  திருவாரூரில் உள்ள கல்லூரி முதலாமாண்டு படித்து வந்தார். இவர்கள் மூவரும் இணைபிரியாத நண்பர்கள்

விபத்து

இவர்கள் 3 பேரும் இணைந்து  நவ்புல்லுக்கு சொந்தமான பைக்கில் நேற்றிரவு கீழ்வேளூருக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து கூத்தூருக்கு பைக்கில் வந்தனர். பைக்கை நவ்புல் ஓட்டி வந்தார். இரவு 9 மணிக்கு  குருக்கத்தி பெட்ரோல் பங்கு அருகே சென்றபோது திருச்சியில் இருந்து குளிர்பானம் ஏற்றி வந்த லோடு வேன், பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 3 பேரையும் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் ஏற்றி சென்றனர்.

ஆம்புலன்ஸ்

ஆனால் செல்லும் வழியிலேயே ரிஷ்வான், பாசித் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நவ்புல் உயிரிழந்தார்.  
இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து லோடுவேன் ஓட்டுநரான சக்திவேலை  கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே ஊரில் நண்பர்களான 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web