வரும் வாரத்தில் 3 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
விடுமுறை

அக்டோபர் 25ம் தேதி புதன்கிழமை மாமன்னன் ராஜராஜ சோழனின் 138 வது சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு   அக்டோபர் 25ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு  கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.   சதய விழாவை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை


கன்னியாகுமரி, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ளூர் நிகழ்ச்சிகளுக்காக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தின்  தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாட்டுடன் இணைந்த நவம்பர் 1ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கன்னியாகுமரி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விடுமுறை

இந்நாளில்  கன்னியாகுமரி மாவட்டத்தை  தமிழ்நாட்டுடன் இணைக்க போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள்  நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.   இதன் ஒரு பகுதியாக நடப்பாண்டில்  நவம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web