ஒரு மாணவனுக்காக 3 மாணவிகள் சண்டை... பிளேடால் கீறியதில் 20 இடத்தில் தையல்கள்!

 
மாணவி

டெல்லியில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருடன் பழகுவதில் யாருக்கு நெருக்கம் அதிகம் என்கிற போட்டியில், அந்த மாணவருக்காக 10ம் வகுப்பு மாணவிகளுக்குள் மோதல் உருவான நிலையில், அடிதடி பிரச்சனையில் மாணவி ஒருவரை  பிளேடால் கீறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் 3 மாணவிகளைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

டெல்லி ரோகிணி பகுதியில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போபோது அதே பகுதியைச் சேர்ந்த சக மாணவிகள் 4 பேர், அந்த மாணவியை தாக்கியதுடன், பிளேடால் சரமாரியாக கீறி உள்ளனர். இதில் 10ம் வகுப்பு மாணவியின் முகம் மற்றும் பின்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்தம் சொட்டச்சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு 20 இடங்களில் தையல்கள் போடப்பட்டன.

மாணவி

மாணவி தாக்கப்பட்டது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசாரின்  விசாரணையில், ஆண் நண்பருடன் பேசுவது தொடர்பாக, சமீபத்தில் தாக்கப்பட்ட மாணவிக்கும், மற்றொரு மாணவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த மாணவி தனது தோழிகளுடன் சேர்ந்து கொண்டு 10ம் வகுப்பு மாணவியை கேலி கிண்டல் செய்து வந்ததும், சம்பவத்தன்று பிளேடால் தாக்கியதும் தெரிய வந்தது.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

இது தொடர்பாக 16 வயதான 2 மாணவிகள் மற்றும் ஒரு 14 வயது மாணவி என  3 மாணவிகளைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?