ஈவு இரக்கமில்லாமல் பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலை ஓரத்தில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை...குழந்தையை மீட்ட திருநங்கை மருத்துவமனையில் அனுமதி!

 
குழந்தை

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே திருச்சி - சென்னை மார்க்கமாக செல்லும் சாலை ஓரத்தில் குழந்தை பிறந்து 3 மணி நேரத்திற்குள் ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாலை ஓரத்தில் வீசி சென்று உள்ளனர்.

குழந்தை

சுங்கச்சாவடி அருகே நின்று இருந்த திருநங்கை ஒருவர் சாலை ஓரத்தில் குழந்தை அழுகின்ற சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் இருக்கும் பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததிருநங்கை அருகே உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு போன் செய்து சாலை ஓரத்தில் வீசப்பட்ட குழந்தையை சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் விசாரணை  செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web