3 கல்யாணம்.. 2 விவாகரத்து.. நடிகர் பவன் கல்யாண் கடந்து வந்த பாதை!

 
 பவன் கல்யாண்

தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று கொண்டாடப்பட்டு வரும் நடிகர் பவன் கல்யாணின் மூன்றாவது திருமணம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ஜன சேனா கட்சித் தலைவராக வெற்றி பெற்ற பிறகு அவரது மூன்றாவது மனைவி அன்னா லெஷ்னே தனது கணவரை ஆரத்தி எடுத்து வரவேற்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே விவாகரத்து பெற்ற அன்னா லெஷ்னேவாவுக்கு பொலேனா அஞ்சனா பவைனவா என்ற மகள் உள்ளார். பவன் கல்யாண் தனது மூன்று குழந்தைகளையும் அன்னா லெஷ்னேவாவின் மகளையும் வளர்த்து வருகிறார். அவர் அன்னா லெஷ்னேவாவை இரண்டு வருடங்கள் டேட்டிங் செய்து 2013 இல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2017 இல் மார்க் ஷங்கர் பவோனோவிச் என்ற மகன் பிறந்தார்.

ரஷிய மாடலும் நடிகையுமான அன்னா லெஷ்னேவா, 2011 ஆம் ஆண்டு வெளியான தீன் மா திரைப்படத்தின் படப்பிடிப்பில் சந்தித்து பழகியுள்ளார். அதன் பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 1997ல் நந்தினியை திருமணம் செய்து விவாகரத்து செய்தார். அதன்பிறகு, 2008ல் ரேணு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து செய்தனர். ரேணு தேசாய் இரண்டு குழந்தைகளுடன் 12 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.

பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுத்த பிறகு, இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் திருமணம் செய்து கொள்வேன். திருமண வாழ்க்கையில் அனைத்து தாம்பத்ய வாழ்க்கையையும் அனுபவிக்க விரும்புவதாக  நடிகை ரேணு தேசாய் சமீபத்தில் அளித்த பேட்டியில்வெளிப்படையாக கூறியிருந்தார். இதற்கு முன் பவன் கல்யாண் 9 பேரை காதலித்து மூன்று பேரை திருமணம் செய்து இரண்டு பேரை விவாகரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web