பள்ளிகளில் இனி இவைகளுக்கு எல்லாம் தடை... திடீர் உத்தரவு!
May 22, 2024, 12:56 IST
தமிழகத்தில் மாணவர்களின் கையில் வண்ணக்கயிறுகள் கட்டத் தடை, பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அனுப்புதல், பள்ளிகளில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்தல் ஆகிய திட்டங்கள் அமலுக்கு வரவுள்ளது. தமிழகத்தில் 2024-25 ம் கல்வியாண்டுக்கான 3 புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில் வண்ணக்கயிறுகள் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோடை வெயில் தணிந்து தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில் ஜூன் 6 அல்லது ஜூன் 11ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
