பகீர்!! பெட்ரோல் பங்க்கில் எண்ணெய் தொட்டிக்குள் விழுந்து 3பேர் பலி!!

 
பெட்ரோல்

பெட்ரோல் பங்க்குகளில் பூமிக்கு அடியில் பெட்ரோல் , டீசல், ஆயில் வகைகளை தொட்டியில் சேமித்து வைத்து  வாகனங்களுக்கு பம்ப் மூலம் எரிபொருள் நிரப்புவர். இந்த டேங்குகளில் லாரிகள் மூலம் வாங்கப்படும் எரிபொருட்கள் நிரப்பப்படும். மீட்டர் வகையில் கணக்கிடப்பட்டு மொத்த எரிபொருட்களும் பூமிக்கடியில் சேமிக்கப்படும். தேவைக்கேற்ப வாகனங்களில் நிரப்பி விடுவர்.

பெட்ரோல்

அதே நேரத்தில் இந்த டேங்குகள் அடியில் தூசுகளுடன் கலந்து எரிபொருட்கள் தன்மை மாறத் தொடங்கிவிடும்.இதனால் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவை சுத்தம் செய்யப்படுவதுண்டு. சுத்தம் செய்வதற்கு பெட்ரோல் பங்க்குகளில் பணிபுரியும் ஊழியர்கள் தவிர்த்து சிறப்பு ஊழியர்கள் இதற்காக நியமிக்கப்படுவதுண்டு. இதில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடும். இதனால் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இதனை சுத்தம் செய்ய வேண்டும். 

ஆந்திர மாநிலம் அண்ணமையா மாவட்டம் ராயசோட்டி நகரில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. . இந்த பெட்ரோல் பங்க்கில் உள்ள எண்ணெய் சேமிக்கும் தொட்டியை 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறடு.  ஏற்கனவே சுத்தம் செய்து 6 மாதம்கடந்து விட்ட நிலையில் இன்று எண்ணெய் தொட்டியை சுத்தம் செய்வதற்காக  3 பேர் பெட்ரோல் பங்கிற்கு வந்தனர்.

ஆம்புலன்ஸ்

அப்போது தொட்டியில் முதலில் இறங்கிய நபர் கால் தவறி உள்ளே விழுந்துவிட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்களான இருவர், உள்ளே விழுந்தவரை காப்பாற்றுவதற்காக கீழே இறங்கினர். ஆனால் அவர்களும் உள்ளே விழுந்ததில் மூவருக்கும் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர்  3 பேரையும்  பெரும் போராட்டத்திற்கு பிறகு தொட்டியில் இருந்து மீட்டனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாராணை நடத்தப்பட்டு வருகிறது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web