பட்டாசு வெடி விபத்தில் 3 பேர் உடல் கருகி பலி... சட்டவிரோதமாக வீட்டில் தயாரித்தபோது பரிதாபம்!

 
பட்டாசு விபத்து


 
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே உரிய அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து வந்ததாக தெரிகிறது. இந்த தயாரிப்பின் போது ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.  வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

குண்டு வெடிப்பு வெடி விபத்து வெடிகுண்டு


விருதுநகர் மாவட்டம் சாத்தூர்  விஜயகரிசல்குளத்தில் வசித்து வருபவர்  பொன்னு பாண்டியன் நேற்று காலை 11 மணிக்கு  இவரது வீட்டில்  சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட உராய்வின் காரணமாக பட்டாசுகள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதில் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (60), சண்முகத்தாய் (55) மற்றும் ஜெகதீஸ்வரன் (15) ஆகிய 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதில் மாரியம்மாள் படுகாயத்துடன்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த வீட்டை மாவட்ட எஸ்பி கண்ணன், பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.  

தீ தீயணைப்பு வெடிவிபத்து பட்டாசு


வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பது தெரிய வந்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த   விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார்  வழக்குப்பதிவு செய்து  பொன்னுப்பாண்டியை கைது செய்தனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?