கோர விபத்து... திடீரென தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்து... சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி!
நிமிஷ நேரம் தான்.. யாருமே நினைச்சு கூட பார்க்கலை.. திடீரென டயர் வெடித்து கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானார்கள். தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் தாலுகாவில் வசித்து வருபவர் ராஜ்மோகன் மனைவி ரேகா . இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தோழி மூமன் சங்கீத் மனைவி டெல்பின் தெரசா அவரது இரண்டரை வயது மகள் மற்றும் ரேகாவின் அக்கா இந்துமதி இவரது மகள் மகாலட்சுமி ரேகாவின் மகள்கள் நந்தனா (13) மிருதுளா (8) ஆகியோர் ஒரு காரில் புதுச்சேரி சுற்றுலா சென்றனர்.
இந்தக் காரை 40வயதான பிரவீன்குமார் ஓட்டி வந்தார். கார் கடலூர் மாவட்டம் திட்டக்குடி எழுத்தூர் கிராமம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இந்துமதி, நந்தனா, ஓட்டுநர் பிரவீன்குமார் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!