மோடி மத்திய அமைச்சரவையில் தமிழகத்தில் இருந்து 3 பேர் !

இந்தியாவில் 3 வது முறை பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்டார். மோடியுடன் 72 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்று கொண்டது. இவர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிபிரமாணம் செய்துவைத்தார். இதில் பிரதமராக மோடி, 30 மத்திய அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்பு இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். இதில் குறிப்பாக மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
மத்தியப்பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சௌஹான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் தோல்வியடைந்த எல்.முருகன் இணையமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அத்துடன் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கரும் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!