3 பேர் சுட்டுக்கொலை!! மாநிலம் முழுவதும் பதற்ற நிலை நீடிப்பு!!

 
துப்பாக்கி சூடு

ஜூலை 8ம் தேதி மேற்கு வங்காளத்தில் கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில்  ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி என மும்முனை போட்டி நிலவி வருகிறது.   நேற்று ஜூன் 15ம் தேதி வியாழக்கிழமை வேட்புமனு தாக்குதலுக்கு கடைசி நாள். அந்த வகையில் நேற்று வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா ஊராட்சி ஒன்றிய தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து கொண்டிருந்தனர்.

துப்பாக்கி சூடு

அந்த சமயத்தில்   இடதுசாரி -காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த சிலர் மீது மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.   இந்த துப்பாக்கி சூட்டில்  3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து அங்கு நீடித்து வரும் வன்முறை சம்பவங்களால் மாநிலத்தின் பல பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.திரிணாமுல் காங்கிரஸ் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்கு வங்காளம்

இது குறித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முகமது சலிம் தனது டுவிட்டர் தளத்தில், 'வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் சோப்ரா ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்ற இடதுசாரி-காங்கிரஸ் தொண்டர்களும், வேட்பாளர்களும் திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளனர்' என குறிப்பிட்டு உள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை திரிணாமுல் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்து உள்ளது. உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் பணிகளில் நீடித்து வரும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் தொடர்ந்து பதட்டநிலை நீடித்து வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web